ஆதார்
அட்டை எடுத்து 10 ஆண்டுகள் முடிந்ததா?மத்திய அரசு புதிய அறிவிப்பு
பத்தாண்டுகளுக்கு
முன் ஆதார் அட்டை பெற்றவர்கள் தங்கள் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை
உடனடியாகப் புதுப்பிக்குமாறு யுஐடிஏஐ வலியுறுத்தியுள்ளது.
புதுடில்லி:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டை
பெற்றவர்கள், தங்களின் வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை இதுவரை புதுப்பிக்காமல் இருந்தால் உடனடியாக புதுப்பிக்குமாறு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நம்
நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்களை உடைய ஆதார் அட்டைகளை
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய
தனித்துவ அடையாள அட்டை ஆணையம் விநியோகித்து வருகிறது. அரசு அளிக்கும் பல்வேறு
நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
கண்களின்
கருவிழி, கைவிரல் ரேகை மற்றும் புகைப்படம்
வாயிலாக எண்ணுக்குரிய நபர் அடையாளம் காணப்படுகிறார்.
ஆதார் அட்டை பெற்றவர்கள் தங்களை குறித்த தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால், அதை உடனடியாக புதுப்பித்துக்
கொள்வது அரசு உதவிகளை பெறுவதில்
ஏற்படும் சிக்கல்களை களைய உதவுகிறது.
இந்நிலையில்,
10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டை
பெற்றவர்கள், தங்கள் வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களில் மாற்றம் இருந்து இதுவரை புதுப்பிக்காமல் இருந்தால், உடனடியாக புதுப்பித்துக் கொள்ளும்படி யு.ஐ.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
யு.ஐ.டி.ஏ.ஐ.,யின் இணையதளம்
அல்லது ஆதார் மையங்களுக்கு நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஞ்சல ஊழியரிடம் ரூ.50 செலுத்தினால் ஆதார் விவரங்கள் வீட்டிற்கே வந்து புதுப்பிக்கப்படும்.