மின்னல்

மின்னல்....
பூமியில் மின்னல் பாயும்போது, அதன் வெப்பம் 50 ஆயிரம் டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தை அடுத்தடுத்து மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை ஒரே ஆண்டில் 23 முறை மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் 90 மைல் தூரம்வரை நீண்டதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மின்னலுக்கு பல பில்லியன் வோல்ட் மின்சாரத்தின் சக்தி உள்ளது. உலகிலேயே மின்னலால் அதிகம் தாக்கப்படும் நாடாக வெனிசுவேலா உள்ளது. ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மின்னல்கள் பூமியை தாக்குகின்றன. மின்னல் மணிக்கு 270,000 மைல் வேகத்தில் பூமியைத் தாக்குகின்றன. இந்தியாவை ஆண்டொன்றுக்கு சராசரியாக சுமார் 2,500 மின்னல்கள் தாக்குகின்றன. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 பேர் மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளனர். மின்னலின் தாக்குதல் 2 மைக்ரோ விநாடிகள் மட்டுமே நீடிக்கும்.. 🌷🌷
Previous Post Next Post